இனிமேல் மாணவர்கள் இதை செய்யக்கூடாது!! பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!
இனிமேல் மாணவர்கள் லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது என பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த 17 வயதான மாணவன் முத்துமணி சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் சுமார் 17 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது மாணவரிடம் உரிய லைசென்ஸ் இல்லை எனவும் எனவே லாரி ஓட்டுநர் மீது மட்டும் முழுமையான காரணம் சொல்ல முடியாது எனக்கூறிய நீதிபதி இழப்பீடு தொகையின் சதவீதத்தை நிர்ணயித்து அதில் 50 சதவீதம் இழப்பீட்டுத் தொகையாக வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். அதையடுத்து இனிமேல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் யாரும் லைசன்ஸ் இன்றி இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு பெற்றோர்கள் கட்டாயம் அனுமதிக்க கூடாது என்று நீதிபதி அறிவுரை கூறினார்.
தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு லைசன்ஸ் இல்லாமல் பெற்றோர்கள் இரு சக்கர வாகனத்தை கொடுப்பதால் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு அவர்களின் உயிருக்கே எமனாக மாறுகிறது. இதில் ஏராளமான சிறுவர்கள் மரணம் அடைந்த கதைகளும் உண்டு. இதனை கருத்தில் கொண்டு இனிமேல் லைசென்ஸ் இல்லாமல் பெற்றோர்கள் இரு சக்கர வாகனத்தை தங்களது மகனோ மகளோ லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுவதற்கு அனுமதிக்க கூடாது என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.