Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவர்கள் அரசியல் பேச வேண்டும்! எம்.பி கனிமொழி பேச்சு!

Students should talk about politics! MP Kanimozhi speech!

Students should talk about politics! MP Kanimozhi speech!

மாணவர்கள் அரசியல் பேச வேண்டும்! எம்.பி கனிமொழி பேச்சு!

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மகளிர் மாணவ அமைப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.அந்த விழாவில் தி.மு.க மகளிர் அணி செயலார் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.மேலும் அவர் அந்த விழாவை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசிய போது மாணவர்களே நீங்கள் அரசியல் வேண்டாம் என கூறினாலும் உங்கள் யாரையும் அரசியல் விடாது எனவும் . பொருளாதாரம் ,வேலை வாய்ப்பு ,உரிமைகள் மற்றும் மாற்றங்கள் என அனைத்துக்கும் அரசியல் தான் காரணம்.அதனால் மாணவர்கள் அரசியல் பேசவேண்டும்.அரசியலில் ஈடுபட வேண்டும் ,அரசியலை மாற்றியமைக்க கூடிய உரிமைகளை ,திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தெளிவு பெறவேண்டும் எனவும் அதற்கு இந்த கல்லூரி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் எனவும் கூறினார்.மேலும் அந்த நிகழ்ச்சியில் தாம்பரம் எம்.எல்.ஏ.எஸ் ஆர். ராஜா ,சென்னை கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் வில்சன் மற்றும் மகளிர் மாணவ அமைப்பு நிர்வாகிகள் ,பேராசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version