கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு எதிராக மாணவிகள் போராட்டம்! பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னை : திருவான்மியூரில் அமைந்துள்ள கலாஷேத்ரா வை சேர்ந்த மாணவிகள் நிர்வாகத்திற்கு எதிராக கைகளில் பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் தொல்லை கொடுக்கும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என மாணவிகள் தெரிவித்தனர்.
கலாஷேத்ரா நிர்வாகம் மீது புகார் :
கலாஷேத்ரா நிர்வாகமானது ருக்மணிதேவி அருண்டேல் என்பவரால் 1936 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதை மத்திய அரசு தன்னாட்சி இயக்கம் என கூறி மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.
அந்நிர்வாகத்தின் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை செய்து வருவதாக அம்மாணவிகள் நிர்வாகத்திடம் புகாரளித்திருந்தனர். ஆனால் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சமூக வலைதளங்களில் பரவுச் செய்தனர்.
மகளிர் ஆணையம் தலையீடு :
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவுவதை பார்த்து தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசு காவல்துறைக்கு பரிந்துரை செய்தது. இது குறித்து அளித்த புகாரில் பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில் எனது பெயரை சொல்லி பேராசிரியர் மீது தவறான புகாரை அளித்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்.
ஸ்டாலின் உறுதி :
தமிழ்நாடு காவல்துறைக்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறிய தேசிய மகளிர் ஆணையம் தற்போது அதை வாபஸ் வாங்கிக் கொண்டது. பிரச்சனை முடிந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இது குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரடியாக விசாரணை செய்வதாக டிஜிபிக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து சட்டசபையில் ஸ்டாலின் அவர்கள் இந்த பிரச்சனை குறித்து எழுத்துப்பூர்வமாக இந்த தகவலும் வராத நிலையில் எதிர்க்கட்சியினர் சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கலாஷேத்ரா புகாருக்கு ஆளானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.