மாணவர்கள் சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நாட்டு நலப்பணித் திட்டத்தில் இருக்கும் மாணவர்கள் சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுவுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட பிரிவு சார்பில் , நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணா பல்கலைகக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், நாட்டு நலப்பணித் திட்டத்தில் உள்ள மாணவர்கள் கல்வி, மருத்துவம், விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் கல்லூரிகளில் நடக்கும் கூட்டங்களில் பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ப்ரீத் – துணை வேந்தர் வேல்ராஜ், (பல்கலைக்கழக கூட்டங்களில் ஆட்சிமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பது குறித்து பேசியது)
அவரைத் தொடர்ந்து பேசிய பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பரந்தாமன், துணை வேந்தர் வேல்ராஜ் வேண்டுகோள் விடுத்ததும் அமைச்சர் உதயநிதி உங்களுக்கு தான் வேண்டுகோள் விடுக்கிறார். கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள் என அறிவுறுத்தியதாகவும் நிச்சயம் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்பேன், அரசுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் பாலமாக இருப்பேன் என கூறினார்.
ப்ரீத்- பரந்தாமன், சட்டமன்ற உறுப்பினர்
அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, துணை வேந்தர் வேல்ராஜ் ஆட்சிமன்ற உறுப்பினர் பரந்தாமனுக்கு வேண்டுகோள் விடுக்கவில்லை. நான் ஆட்சிமன்ற உறுப்பினராக இருந்த போது ஒரு கூட்டத்திலும் பங்கேற்காததை சுட்டிக்காட்டியுள்ளார் என கூறினார்.
ப்ரீத்- அமைச்சர் உதயநிதி
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, தானும் நாட்டு நலப்பணிகள் திட்டத்தில் உறுப்பினராக இருந்துள்ளதாகவும், தமிழக மாணவர்கள் எல்லா வகையிலும் ஆக்கபூர்வமான பணிகள் செய்து வருவதாகவும் அவர்களுக்கு தனது வாழ்த்துகள் என தெரிவித்தார்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அடுத்த ஆண்டு டெல்லியில் நடக்கும் நாட்டு நலப்பணி திட்ட பேரணியில் பங்கேற்கும் மாணவர்கள் விமானம் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள் என உறுதியளித்த அவர், சமூக சேவையுடன் கல்வியும் முக்கியம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எனவே சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.