Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா வைரஸ்க்கு  எதிராக  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வில் தகவல்!!

Study finds vaccine against corona virus

Study finds vaccine against corona virus

கொரோனா வைரஸ்க்கு  எதிராக  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வில் தகவல்!!

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ்க்கு எதிராக  தடுப்பூசி உருவாக்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபறுகிறது. கொரோனா வைரஸின் வீரியத்தை குறைத்து அதை உடலுக்குள் செலுத்துவதை அடிப்படையாக கொண்டுள்ளன. ஆனால் அமெரிக்காவில் உள்ள பைசர் மாடர்னா நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியில் எம்.ஆர்.என்.ஏ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி தயாரிப்பில் இதுவரை காணாத தொழில்நுட்பமாக விளங்குகிறது.இதில் எளிதாகவும் விரைவாகவும் தடுப்பூசி தயாரிக்கலாம் என சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏ. என்ற மரபு சங்கிலி அமைப்பு உள்ளது. இவற்றில் பல பிரதிகள் இருகிறது . அதில் ஒரு பிரதி எம்.ஆர்.என்.ஏ. ஆகும்.கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டின் முதல் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஜெனோவா பயோபார்மசியூட்டிகல்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த தடுப்பூசிக்கு ஜெம்கோவாக்-19 எனவும்  பெயரிடப்பட்டுள்ளது.எம்.ஆர்.என்.ஏ என்பது செல்களில் உள்ள புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஈடுபடும் ஒற்றை இழை ஆர்.என்.ஏ. வகை ஆகும்.எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் பாதுகாப்பானது எனவும் கருதப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம் வைரஸ் உருவாகும்.உருமாற்ற வைரஸ்களுக்கு ஏற்ற வகையில் தடுப்பூசியை வேகமாக மாற்றுவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

மேலும் இந்த தொழில்நுட்ப தளம் இந்தியாவை தொற்று நோய்க்கு தயாராக இருக்க உதவும் என கருதப்படுகிறது. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் முடிந்துள்ளன. அவை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் கொடுக்கப்பட்டு மதிப்பிடப்பட்டுள்ளன.இதில் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் வைரஸ்களை சகித்துக்கொள்ளக்கூடியது மேலும் நோய் எதிர்ப்புத்திறன் கொண்டுள்ளது.

இதை பற்றி ஜெனோவா பயோபார்மசியூடிக்கல்ஸ் நிறுவனம் கூறுகிறது. இதன் அடிப்படையில் இந்த தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதலை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கி உள்ளது. இந்த தகவல்களை ஜெனோவா பயோபார்மசியூடிக்கல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.கூடிய சீக்கிரம் இந்த தடுப்பூசி இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version