Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிந்து மாதவியின் அசத்தலான வைரலாகும் புகைப்படம்!!

ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவர் பிந்துமாதவி. 2008 ஆம் ஆண்டு பொக்கிஷம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார்.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.தமிழில் கழுகு,தேசிங்குராஜா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஜாக்சன் துரை மற்றும் பசங்க 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார் பிந்துமாதவி.

சற்று குண்டான தோற்றத்தை கொண்டிருந்த பிந்துமாதவி தற்போது தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக காட்சி அளிக்கிறார்.

பிக்பாஸில் கலந்துகொண்ட பிந்து மாதவிக்கு பல மாதங்களாகவே பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் தற்போது தன்னுடைய ஸ்லிம்மான உடலை கொண்டு photo shoot எடுத்து அதனை பல தயாரிப்பாளர்கள் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து கொண்டிருக்கிறாராம்.

இப்படி இவர் எடுக்கும் புகைப்படங்கள் கவர்ச்சியானதாகவும், ரசிகர்களை ஆச்சரியப்பட கூடிய வகையிலும் உள்ளதாம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version