Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டி நகரில் ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரில் இரண்டு நாட்களுக்கு முன் நடுஇரவில் அடுத்தடுத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூடு நடந்த அனைத்து பகுதியும் மக்கள் வசிக்கும் பகுதியாகும்.  இது மட்டுமல்லாமல் நகரின் வேறு 2 இடங்களிலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த 4 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 4 பேர் பலியாயினர்.

18 பேருக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் ஈடுபட்டவர்கள் யார் என்ற விவரம் இப்போது வரை தெரியவில்லை. இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். அவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள்” என்றார். இதனிடையே டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

 

 

 

Exit mobile version