Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாயிகள் இதை செய்தால் மானியத் தொகை உயர்த்தப்படும் அமைச்சர் உறுதி!

உலக மண் தினம், ஒருங்கிணைந்த பண்ணையம், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கம் உள்ளிட்ட முப்பெரு விழா மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி உரையாற்றினார் அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை ஏற்படுத்தினார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகளுக்கு பயன்படுகின்ற விதத்தில் முல்லைப் பெரியாறு அணை உரிய சமயத்தில் திறக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தேவைக்கு அதிகமாக வேளாண் உற்பத்தி இருக்கிறது என கூறியிருக்கிறார்.

வேளாண் பெருமக்கள் இயற்கை விவசாயத்தை செய்ய ஆர்வம் கொள்ள வேண்டும், இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த இது தான் உகந்த காலமாக இருக்கும் கிராமப்புறங்களில் இயற்கை விவசாயம் தொடர்பாக விழிப்புணர்வு உண்டாக்கப்படும். இயற்கை விவசாயத்துக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்து இருக்கிறார்.

மதுரை மாவட்டத்தை தலைநகராகக்கொண்டு 6 மாவட்டங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளால் முருங்கை மூலமாக உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படும். இனிவரும் காலங்களில் தோட்டக்கலை துறைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும், மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் அனைத்து பகுதிகளிலும் முருங்கையை விவசாயிகள் பயிர் செய்து பயனடைய வேண்டும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதத்தில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு இருக்கிறது. முதலமைச்சரின் திட்டங்களால் நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகள் எல்லோரும் பயன்பெறும் விதத்தில் லாபகரமான தொழிலாக விவசாயத்தை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து இருக்கிறா

Exit mobile version