எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் குறைப்பு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

0
201
#image_title

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் குறைப்பு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்கு அளிக்கப்படும் மானியத் தொகையை குறைத்துள்ளதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அறாவித்தது. அதாவது FAME -II எனப்படும் Faster Adoption And Manufacturing Of Hybrid And Electric Vechicles எனப்படும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த FAME – II திட்டத்தின் கீழ் இது வரை 1 கிலோ வாட் செயல் திறன் பேட்டரி கொண்ட எலக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்களுக்கு 15000 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த மானியத் தொகையை குறைத்துள்ளதாக மத்திய கனகரக தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 15000 ரூபாய் மானியம் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 10000 ரூபாயாக குறைக்கப்பட்டு புதிய மானியமாக வழங்கப்படவுள்ளது.

மேலும் 40 சதவீதமாக இருந்த மொத்த மானிய தொகை 15 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த FAME – II திட்டத்திற்காக அரசாங்கம் அறிவித்திருந்த 2000 கோடி ரூபாயும் முழுமையாக பயன்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை ரத்து செய்தால் இது சந்தையால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மேலும் கூடுதலாக 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியும் ஆகஸ்டு மாதத்திற்குள் முழுமையாக பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.