Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்களுக்கு மட்டும் இரு சக்கர வாகனம் வாங்க மானியம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Subsidy to buy a two-wheeler only for them! The order issued by the District Collector!

Subsidy to buy a two-wheeler only for them! The order issued by the District Collector!

இவர்களுக்கு மட்டும் இரு சக்கர வாகனம் வாங்க மானியம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் உலமாக்களுக்கு மானிய விலையில் 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் தொகையை மானியமாக வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் இந்த இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கியர் இல்லாத,தானியங்கி கியர் மற்றும் 125சிசி சக்திக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த மானியம் பெற விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வக்பு நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் பணியாற்றும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேந்தவராக இருக்க வேண்டும்.18 வயது முதல் 45 வயது கொண்டிருக்க வேண்டும்.அவ்வாறு விண்ணப்பிக்கும் பொழுது ஆதார் அட்டை,வாக்காளர் அடையாள அட்டை போன்ற தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் இணைக்க வேண்டும்.

மானிய விலை இரு சக்கர வாகனம் பெறுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் உலமாக்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணபிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version