Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆவின்  கொடுக்கும் அடுத்தடுத்து அதிரடி! இந்த பொருளின் விலை இன்று முதல் உயர்வு!

successive-action-of-aa-the-price-of-this-product-has-increased-from-today

successive-action-of-aa-the-price-of-this-product-has-increased-from-today

ஆவின்  கொடுக்கும் அடுத்தடுத்து அதிரடி! இந்த பொருளின் விலை இன்று முதல் உயர்வு!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் தான் செய்து வருகின்றது.இந்த நிறுவனத்தின் மூலமாக பால்,தயிர்,வெண்ணெய்,பால் பவுடர், நெய், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் போன்ற பாலினால் செய்யப்படும் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது.மேலும் ஆவின் பால் சில்லறை விற்பனை விலையை உயர்த்தியது. இந்நிலையில்  நேற்று ஆவினில் தயாரிக்கப்படும் நெய்யின்  விலை லிட்டருக்கு ரூ 50 உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த முறை நெய் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.புதிய விலை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆவின் நிர்வாகம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஆவின் நெய் விலையை தொடர்ந்து தற்போது ஆவின் வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விலை உயர்வின்படி சமையலில் பயன்படுத்தப்படும் உப்பு கலந்த வெண்ணெய்  100 கிராம் 52 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும்,500 கிராம் வெண்ணெய் 250 ரூபாயில் இருந்து 260 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Exit mobile version