அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள்! அச்சத்தில் உறைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் !!
வங்க தேசத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் தொடர்ச்சியாக அஸ்ஸாம் மற்றும் மேகாலயம் பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது.
வங்கதேசத்தின் கோபால்கஞ்ச்-யில் நேற்று காலை 10.16 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளியாக பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வு தாக்கத்தின் காரணமாக, அருகில் உள்ள இரண்டு நாடுகளில் அதாவது மியான்மர் மற்றும் மணிப்பூரில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மியான்மரில் 5.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வு அதிகாலையில் 3.52 மணியளவில் பதிவாகியுள்ளது. மணிப்பூரின் கம்ஜோங்கில் –யில் 3.8 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அஸ்ஸாம் மற்றும் மேகாலயம் போன்ற பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்ப்பட்டிருக்கிறது. இதனால் வீடுகளும், கட்டிடங்களும் அதிர்ந்து மக்கள் அச்சத்திற்கு உள்ளானார்கள்.
இந்த நில நடுக்கத்தால் மக்களுக்கு உயிர்ச்சேதம் பொருள்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் வடகிழக்கு பிராந்தியம் அமைந்துள்ளது என்பது குப்பிடத்தக்கது.
வடகிழக்கு பகுதி அதிகமான நில அதிர்வு மண்டலத்தில் உள்ளதால், அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 50000 -க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். அதன் பின்னர் நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக உலக நாடுகளில் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.