Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொருளாதாரத்தில் அடுத்தடுத்து வளர்ச்சி… சென்னையை முழுமையாக மாற்ற வேண்டிய நேரம் இது… அண்ணாமலை பேச்சு!

#image_title

பொருளாதாரத்தில் அடுத்தடுத்து வளர்ச்சி… சென்னையை முழுமையாக மாற்ற வேண்டிய நேரம் இது… அண்ணாமலை பேச்சு!

பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை கேட்டுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் பகுதியில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மக்களின் அன்பை பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும்போது ஐந்தாவது பொருளாதார நாடாக உள்ளோம்.

2028 இல் மூன்றாவது பொருளாதாரம் நாடாக மாறுவோம். நாட்டு மக்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும். இஸ்லாமிய மக்கள் தங்களின் புனித ஹஜ் பயணத்திற்கு ஒரு ஆண்டிற்கு 2 கோடி பேர் செல்கிறார்கள்.

அதன் மூலமாக சவுதி அரேபியாவிற்கு வரக்கூடிய வருமானம் 12 பில்லியன் டாலர். கிறிஸ்தவர்கள் கடந்த ஆண்டு வேளாங்கண்ணிக்கு 80 லட்சம் பேர் சென்றார்கள். இதன் மூலம் வந்த வருமானம் 315 மில்லியன் டாலர். திருப்பதிக்கு கடந்த ஆண்டு இரண்டரை கோடி பேர் சென்றனர் இதன் மூலம் 1200 கோடி வருமானம் கிடைத்தது.

எஸ்.பி.ஐ இன் கணிப்புப்படி அடுத்த ஆண்டு அயோத்தியாவிற்கு 5 லட்சம் பேர் செல்வார்கள் அதன் மூலம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு 4 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். இதன் மூலம் உத்தர பிரதேச அரசுக்கு 25 ஆயிரம் கோடி வரி கிடைக்கும்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் 32 மாதத்தில் 2 லட்சத்து 69 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கியுள்ள மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு. முழுமையாக சென்னை மாநகரை மாற்ற வேண்டிய நேரம் இது.” எனப் பேசினார்.

Exit mobile version