தனுஷ் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழும் சந்தோஷங்கள்!! உச்சகட்ட மகிழ்ச்சியில் நெப்போலியன்!!

0
208
Successive happiness in Dhanush's life!! Napoleon in supreme joy!!
Successive happiness in Dhanush's life!! Napoleon in supreme joy!!

நடிகர் மற்றும் அரசியல்வாதியான நெப்போலியன் அவர்கள் தன்னுடைய மூத்த மகன் தனுஷ் அவர்களின் தசை சிதைவு நோய்க்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறினார் என்பது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் நெப்போலியன் மூத்த மகனான தனுஷ் அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தின் நிச்சயதார்த்தம் இந்தியாவில் நடைபெற்ற அமெரிக்காவில் திருமணம் நடைபெற சில சட்ட சிக்கல்கள் இருந்த நிலையில் ஜப்பானில் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்தனர். திருமணத்தில் மீனா சரத்குமார் ராதிகா என பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இவர்கள் மட்டும் இன்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் செல்போன் மூலம் அழைத்து தன்னால் கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அமெரிக்கா வரும்பொழுது கண்டிப்பாக நேரில் வந்து பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களும் வீடியோ கால் மூலம் மணமக்களை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி உள்ள சூழ்நிலையில் நெப்போலியன் மூத்த மகனான தனுஷ் அவர்களின் வாழ்க்கையில் மற்றொரு மகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது. ஜப்பானில் கல்யாணம் முடிந்த சில மாதங்களில் அமெரிக்காவிலும் மீண்டும் திருமணம் நடக்கும் என நெப்போலியன் தெரிவித்து இருந்தார்.

திருமணத்துக்கு பிறகு தனுஷும் அக்‌ஷயாவும் மகிழ்ச்சியோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள். அதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி ட்ரெண்டாகின.

சூழ்நிலை இவ்வாறு இருக்கும் பொழுது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி தன்னை வந்து சேர்ந்ததாக தனுஷ் தெரிவித்திருக்கிறார். அதோ பின்வருமாறு :-

Pokeman 25ஆவது வருட விழாவையொட்டி உருவாக்கப்பட்ட ஜாக்கெட் எனக்கு கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். தனுஷுக்கு Pokeman மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த ரசிகர்கள் உங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து உங்களுக்கு பிடித்த விஷயங்கள் கிடைத்து மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகள் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.