Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாரிசு திரைப்படத்தின் முக்கிய பிரபலம் மரணம்! சோகத்தில் ஆழ்ந்த படக்குழுவினர்!

Successor Movie's Main Celebrity Dies! The film crew is deeply saddened!

Successor Movie's Main Celebrity Dies! The film crew is deeply saddened!

வாரிசு திரைப்படத்தின் முக்கிய பிரபலம் மரணம்! சோகத்தில் ஆழ்ந்த படக்குழுவினர்!

வாரிசு திரைப்படத்தில் பிரபல நடிகர் விஜய் நடித்துள்ளார்.இந்த படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.அதே தேதியில் அஜித்தின் துணிவு படமும் வெளியாக உள்ளது.அதனால் இரண்டு தரப்பு ரசிகர்களும் அதிக எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.வாரிசு திரைப்படம் வெளியாகுவதற்கு இன்னும் ஒருவாரம் தான் இருகின்றது.இந்நிலையில் அந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வந்தவர் சுனில் பாபு உடல்நல குறைவால் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.இந்த சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.மேலும் சுனில் பாபு பிரபல கலை இயக்குநரான சாபு சிரிலியிடம் உதவி புரோடஷன் டிசனைராக முதன் முதலில் பணியாற்றினார்.மலையாளத்தில் பல படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அனந்த பத்ரம், பெங்களூரூ டேஸ்,காயம்குளம் கொச்சுன்னிப, பழசிராஜா, உருமி, சோட்டா மும்பை, பிரேமம், நோட்புக், ஆமி ஆகிய படங்களில் வேலை செய்துள்ளார்.

அனந்த பத்ரம் படத்திற்காக சிறந்த கலை இயக்குநர் என்ற கேரள மாநில விருதை பெற்றார்.மேலும் இந்தியில் எம்எஸ்தோனி, கஜினி, லஷியா,ஸ்பெஷல் 26 போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார்.சுனில் பாபுவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உள்ளனர்.நடிகர் துல்கர் சல்மான்,சுனில் பாபுவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Exit mobile version