Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணாமலை மாமனார் பெயரில் இவ்வளவு பெரிய பங்களா வீடா?

#image_title

அண்ணாமலை மாமனார் பெயரில் இவ்வளவு பெரிய பங்களா வீடா?

கோவையில் மிகப்பிரமாண்டமாக மூன்று கோடி ரூபாய் செலவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கட்டியுள்ள பங்களா வீடு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

“எனக்குன்னு சொத்து எதுவும் இல்லை, சிறு அளவு விவசாய நிலமும், சில ஆடுகள் தான் என்னுடைய சொத்து” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பல பேட்டிகளில் கூறியுள்ளார். தன்னுடைய குடும்ப செலவுக்குக் கூட நண்பர்கள் தான் எனக்கு உதவி செய்கிறார்கள் என்றும் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது அண்ணாமலை அவர்கள் தனது மாமனார் பெயரில் மூன்று கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாகப் பங்களா வீடு கட்டி உள்ளது. பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை அவர்கள் 10 ஆண்டுக்காலம் காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். நேர்மையான அதிகாரி என்று பெயரும் பெற்றுள்ளார். ஆனால் அவர் தனது ஐபிஎஸ் வேலையை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த நாள் முதல் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அண்ணாமலை அவர்களின் மாமனாரும் பெரும் செல்வந்தர் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர் பெயரில் எப்படி இவ்வளவு இவ்வளவு பெரிய பங்களா கட்ட முடிந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அண்ணாமலை அவர்கள் தனது காவல்துறை பணியை விடுத்து பாஜக கட்சியில் இணைந்த போது ஒரு கணிசமான தொகை பெற்றதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது கூட பாஜகவில் மாநிலத் தலைவர் என்று பொறுப்பு வகித்துப் பல முக்கிய புள்ளிகளை மிரட்டி அண்ணாமலை அவர்கள் காசு பார்க்கிறார் என்றும் கூறப்படுகிறது. அரசியல் வியாபாரியாக அண்ணாமலை அவர்கள் மாறியுள்ளார் என்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போது பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பிரபலங்கள் கூட அண்ணாமலை அவர்களின் புதிய பங்களா வீட்டைப் பற்றித்தான் பேசிக் கொண்டு வருகிறார்கள். ஆனால், இதில் பொய்யான தகவல் என்றும் அண்ணாமலை தரப்பில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version