Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாமக முன்னாள் தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! கலக்கத்தில் கட்சித் தலைமை!

Sudden admission to the hospital of Bama main point! Party leadership in chaos!

Sudden admission to the hospital of Bama main point! Party leadership in chaos!

பாமக முன்னாள் தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! கலக்கத்தில் கட்சித் தலைமை!

பாமகவின் மூத்த உறுப்பினரான ஜிகே மணி உடல் நல குறைவால் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில மாதம் முன்பு தான் பாமக கட்சியின் இளைஞரணி தலைவராக இவரது மகன் தமிழ் குமரன் நியமிக்கப்பட்டார். பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் அரியணை ஏறிய நிலையில் இவர் இருந்த பதவிக்கு யார் வரப் போகிறார்கள் என்று பல எதிர்பார்ப்புகள் இருந்தது.

இவ்வாறு பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில்  முன்னாள் பாமக தலைவராக இருந்த ஜிகே மணியின் மகனை நியமித்தனர். பாமக கௌரவ தலைவரான ஜிகே மணிக்கு சமீப காலமாக உடல் உபாதை இருந்து வந்துள்ளது. எது சாப்பிட்டாலும் செரிக்காமல் ஜீரணக் கோளாறு இருந்துள்ளது. இந்நிலையில் சென்ற வாரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அங்கு இவர் கறி விருந்து சாப்பிட்டுள்ளார்.

அதனையடுத்து இவருக்கு அந்த உணவு செரிக்காமல் பெருமளவு சிரமப்படுள்ளார்.இதனை தொடர்ந்து அவருக்கு வாந்தி,மயக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது.தொடர் உடல்நலக்குறைவு காரணமாக அவரை உடனடியாக சேலத்தில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேற்கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது அவர் உடல்நிலை சீராக உள்ளது என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது உடல்நலம் பற்றி தமிழகம் முதல்வர் தொலைபேசி வாயிலாக  கேட்டறிந்தார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது.

Exit mobile version