திருப்பதி தேவஸ்தானத்தில்  திடீர் அறிவிப்பு!! சிரமத்தில் பக்தர்கள்!!  

0
138
Sudden announcement at Tirupati Devasthanam !! Devotees in trouble !!

திருப்பதி தேவஸ்தானத்தில்  திடீர் அறிவிப்பு!! சிரமத்தில் பக்தர்கள்!!

தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகிறது கோரோன வைரஸின் 2ஆம்  அலை.  இந்நிலையில் தென்னிந்திய மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வரும் பதிப்பு எண்ணிக்கை மக்களியே பெரும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானத்திலும் தினமும் கொரானா பதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக தேவஸ்தானம்  சில புதிய விதிமுறைகளை தீடீரென நேற்று நள்ளிரவு அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள சில கட்டுப்பாடுகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு இந்த விதிமுறைகள் எதுவும் தெரியாததால் அலிபிரி சோதனை சாவடியில் மக்கள் வந்து குவிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் தடுமாற்றம் நிலவியது.

தேவஸ்தானம் அறிவித்த புதிய விதிமுறைகள் இதோ

1)  தரிசன டிக்கெட் பெற்று, நடைபாதை மார்க்கத்தில் திருமலைக்கு வர விரும்புபவர்கள், 24 மணிநேரத்திற்கு முன்பே செல்ல அனுமதிக்கப்படுவர்.

2) அடுத்த நாளுக்கான தரிசன டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்கள், மதியம், 1 மணிக்கு மேல் மட்டுமே வாகனங்கள் வாயிலாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.

இந்த விதிமுறைகள் எதுவும்  தெரியாத பக்தர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 2 நாள்களுக்கு முன்பே இந்த விதிமுறைகளை அறிவித்திருந்தால் மக்கள் அனைவரும் அதற்கேற்றார் போல தரிசனத்திற்கு வந்திருப்பார்கள். இதனால் தேவஸ்தான நிர்வாகிகள் மீது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.