அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இன்று முதல் 144 தடை உத்தரவு!

0
140
Sudden announcement by the government! 144 restraining orders from today!

அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இன்று முதல் 144 தடை உத்தரவு!

இந்திய இராணுவங்களில் தற்போதைய மற்றும் நிரந்தரனமான அடிப்படையில்  இராணுவ வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.தற்போது தேர்வு செய்யும் அடிப்படையில இந்திய இராணுவவீரர்கள் பத்து ஆண்டுகள் வரை இராணுவ துறையில் பணியாற்றலாம் என கூறப்பட்டிருந்தார்கள்.நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படும்  இராணுவ வீரர்கள்  ஒய்வு பெரும் வரைக்கும்  இந்திய  இராணுவத்தில்  பணியாற்ற முடியும். ஆனால் மத்திய அரசு ஜூன் 14ஆம் தேதி இந்திய இராணுவத்தில் ஆட் சேர்ப்பதற்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்கள் .மேலும் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்திற்கு பீகார், உத்திரபிரதேசம் ,அறிஹானா மற்றும் தெலுங்கான ஆகிய மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் இத்திட்டதிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

பேருந்துகளை தீ வைத்து எரித்தும், பேருந்து கண்ணாடிகளை உடைத்தும் ,கட்டையால் சாலை வழியில் செல்லும் வாகனங்களை அடித்து நொறுக்கியும்,உருவ பொம்மைகளை செய்து அதில் காலணிகளை கட்டி தொங்க விட்டும்  பின்பு அந்த உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி  எரித்தும் ,பெட்ரோல் குண்டுகளை சாலையில் வீசி போக்குவரத்தை இடையூறு செய்வது போன்ற செயல்களை செய்துவந்தனர்.போராட்டத்தில் ஹரியானா,பீகார் மற்றும் உத்திரபிரதேசம்  ஆகிய மாநிலங்களில்  பெரும்  பரபரப்பாக  காணப்படுகிறது.

இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்துவதால் ஹரியானா மற்றும் குருகிராமில் 144 தடை உத்தரவு போட்டுள்ளனர்.தொடர்ந்து  அரியானாவில் நடைபெறும் போராட்டத்தினால்  சில பகுதிகளில் இணைய சேவை  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பாக பத்துக்கு மேற்ப்பட்ட மாநிலங்களில் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்குள்ள இணைய சேவைகள்,ரயில் சேவைகள்  மற்றும் போக்குவரத்து சேவைகள்  அனைத்துமே முடக்கப்பட்டுள்ளது.