Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பணியில் இருந்த பெண் அதிகாரி மீது திடீர் தாக்குதல்!! அங்கேயே பணிபுரிந்த சமையல்காரரின் வெறி செயல்!! 

பணியில் இருந்த பெண் அதிகாரி மீது திடீர் தாக்குதல்!! அங்கேயே பணிபுரிந்த சமையல்காரரின் வெறி செயல்!! 

விமானப்படை தளத்தில் பணியில் இருந்த பெண் அதிகாரி ஒருவர் மீது அங்கிருந்த சமையல்காரர் திடீரென கடும் தாக்குதல் நிகழ்ச்சி இருந்தார். இதற்கான பின்னணி குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

பதான்கோட் உள்ள விமானப்படைத்தளத்தில் பெண் அதிகாரி மீது தாக்குதல் நடைபெற்றது.

இந்திய விமானப்படைத்தளம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட்டில்  உள்ளது. இங்கு  விமானப்படையில் பெண் அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் மீது அந்த  விமானப்படைத்தளத்தில் சமையல் வேலை செய்துவரும் நபர் இன்று தாக்குதல் நடத்தியுள்ளார்.

அந்தப் பெண் அதிகாரி பணியில் இருந்த பொழுது திடீரென அங்கு வந்த சமையல்காரர் கூர்மையான ஆயுதத்தால் பெண் அதிகாரி மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளார். திடீரென நடைபெற்ற இந்த சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரியால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த பெண் அதிகாரி உடனடியாக சண்டிகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு  அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தாக்குதல் நடத்திய சமையல்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும் அவர் அதிகாரியை தாக்கியதற்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை.

எனவே பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Exit mobile version