பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்!

0
161
Sudden change in giving Pongal gifts! Information released by the government!

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.அதனை தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதன்  காரணமாக எந்த ஒரு பண்டிகையையும் முறையாக கொண்டாடவில்லை.கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினார்கள் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.அதனை தொடர்ந்து கார்த்திகை தீபம் மற்றும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை என அனைத்தையும் மக்கள் உற்ச்காத்துடன் கொண்டாடினார்கள்.கடந்த மாதம் முதல் சீனா,ஜப்பான் ,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.அதனால் சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் பலபடுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ 1000 ரொக்க பணம் ,சர்க்கரை, பச்சரிசி மற்றும் கரும்பு வழங்க முடிவு செய்தது.அதற்காக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.தமிழகத்தை போல புதுச்சேரி மாநிலத்திலும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.

அதில் பச்சரிசி,வெள்ளம்,உளுந்து,கடலைப்பருப்பு,முந்திரி,திராட்சை,ஏலக்காய்,உள்ளிட்ட பத்து பொருட்கள் அடங்கிய ரூ 500 மதிப்பிலான தொகுப்பு வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால் இதனை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பொங்கல் பரிசு பொருட்களை அங்கன்வாடியில் வழங்குவதற்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் ரூபாய் 470 வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கான கோப்பை ஆளுநர் ஒப்புதல் அனுப்பி உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறபடுகிறது.அதற்கான ஒப்புதல் வந்தவுடன் விரைவில் பயனாளிகளின் வங்கி கணக்கில் இந்த தொகை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.