Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு ஊழியர்களிடம் நடத்தப்படும் திடீர் சோதனை :! அச்சத்தில் அரசு ஊழியர்கள்

தமிழகத்தில் கடந்த 75 நாட்களாக அரசு அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதில் கடந்த 75 நாட்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.

மேலும் 127 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், 6 கோடியே 96 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் , புகாரில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 62 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 37 லட்சத்துக்கும் மேலான பணங்கள் பிக்சட் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

பொருட்களாக 7.232 கிலோ தங்கமும் ,9.843 கிலோ வெள்ளியும் , 10.51 கேரட் வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது . மேலும் அவர் வீட்டில் 17 சொத்து ஆவணங்கள் மற்றும் மற்ற அரசு அதிகாரிகள் இடையே வங்கி கணக்கும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணையில் ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Exit mobile version