Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குஷ்பு வீட்டில் நடந்த திடீர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

Sudden death at Khushbu's house! Condolences from the film industry!

Sudden death at Khushbu's house! Condolences from the film industry!

குஷ்பு வீட்டில் நடந்த திடீர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி  80 மற்றும் 90களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.இவர் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் மற்றும் சரத்குமார்,பிரபு,விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் படங்களில் நடிகையாக மட்டுமின்றி படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.இவருடைய கணவர் சுந்தர் சி பல படங்களை இயக்கியுள்ளார்.அதிலும் அரண்மை,அரண்மை 2,கலகலப்பு போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது.இவரும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் குஷ்புவின் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் என்னுடைய அண்ணன் தற்போது உடல்நல குறைவால் மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக வெண்டிலேட்டரில்  அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றார்.அவர் விரைவில் குணமாக வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் என்னுடைய அண்ணன் அபுபக்கர் இன்று காலமானார் என குஷ்பு அவருடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் எப்போதும்  உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு அன்புக்குரியவர்களை விடைபெறும் நேரம் வரும் அந்த வகையில் என்னுடைய அண்ணனின் பயணம் இன்றுடன் முடிந்தது.

அவருடைய அன்பும் மற்றும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்களுடன் இருக்கும் அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என கூறியிருந்தார்.வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது.நிம்மதியாக ஓய்வெடுங்கள் #Bhaijaan”என்று பதிவிட்டுள்ளார்.மேலும் திரையுலகினர் பலரும் குஷ்புவிடம் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version