Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செம்பருத்தி சீரியலில் ஏற்பட்ட திடீர் மரணம்!

தமிழ் சீரியல்களுக்கு எல்லாம் போட்டியாக, டிஆர்பி ரேட் உச்சத்தில் இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ என்ற சீரியல்.

இந்த சீரியலில் கதாநாயகியான ஷபானா தனது நடிப்பு தனக்கென ரசிகர்பட்டாளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.இதில் ஹீரோவாக கார்த்திக், பிரியா ராமன், வில்லியாக பரதா நாயுடு நடித்து வருகிறார். 

பரதா நாயுடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதுகொண்டே வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ” செம்பருத்தி சீரியலில்  கேமராமேனாக பணியாற்றி வரும் அன்பு என்பவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.செம்பருத்தி சீரியலில் பெரிய பாலிடிக்ஸ் நடக்கிறது. இதனால் நான் தனிமையில் தான் இருந்து வந்தேன். அந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் இயக்குனர் சுகுமார், கேமராமேன் அன்பு ஆகியோர் தான் என்றும் தற்போது கேமராமேன் அன்புவை ரொம்பவே மிஸ் பன்றேன்” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது செம்பருத்தி சீரியல் குடும்பத்தார் அனைவரும் இந்த திடீர் மரண செய்தியை கேட்ட கேமராமேன் அன்பிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இதனால் செம்பருத்தி சீரியல் சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

Exit mobile version