ரஜினியிடம் சென்று தஞ்சம் அடைந்த சரத்பாபு முதல் மனைவி!! அப்போவே அவர் செய்த காரியம்!!
மறைந்த நடிகர் சரத்பாபுவை பற்றி கடந்த சில நாட்களாகவே அதிகம் பேசி வருகிறார்கள். சரத்பாபுவின் முதல் மனைவி ரமாபிரபா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். தற்போது ஆந்திராவில் ஒரு குக் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் சினிமா வேண்டாம் என் ஒதுங்கி தனியாக வசித்து வரக்கூடியவர் ரமா பிரபா.
இந்நிலையில் சென்னையில் தன் உடன் பிறந்தவர்கள் மற்றும் தாய் இவர்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்போது 12 வயது சிறுமியான ரமாபிரபா நாடங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி அலைகிறார். பலர் புறக்கணித்த நிலையில் ஒரு சில வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்த நான்கு வருடங்களில் தெலுங்கில் ரமா பிரபா சொந்தமாக படத்தை தயாரிக்கிறார்.
சரத்பாபு நடித்த இந்த படம் காலை முதல் சோவிலே எந்த ஒரு வரவேற்பும் இல்லை. அடுத்தடுத்து சோக்கள் பல திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. முதல் நாளிலேயே அந்த படம் முடங்கியது. இருந்தும் சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த ரமாபிரபா அவருடைய கணவர் சரத்பாபுவை விட்டு பிரிந்து, அவர் சம்பாதித்த பணம் எல்லாம் வீணாகியது. சினிமாவில் பட வாய்ப்பும் இல்லை.
சரி இனி ஊருக்கு போய்விடலாம் என முடிவெடுத்தார் ரமாபிரபா. ஆனால் சொந்த ஊரான ஆந்திராவிற்கு போவதற்கு கூட வழி செலவுக்கு பணம் இல்லாததால் யாரிடமும் சென்று உதவி கேட்பது என பெரும் குழப்பத்தில் இருந்தார். ரமாபிரபா நினைவுக்கு வந்தது ரஜினிகாந்த். உடனே ரஜினி வீட்டிற்கு சென்று நான் திரும்ப ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். எனக்கு எதாவது உதவி செய்யுங்க என்றார் ரமாபிரபா. அப்போது ரமாபிரபாவின் நிலைமைய பார்த்து கன்கலங்கியபடி கேட்டார் ரஜினிகாந்த்.
சற்று முன் ஒரு படத்தில் நடிக்க ரஜினிக்கு அட்வான்ஸ் கொடுத்த மொத்த பணத்தை எடுத்து ரமாபிரபா கையில் கொடுத்துள்ளார். அதற்கு ரமா எனக்கு இவ்வளவு தொகை வேண்டாம். எனக்கு ஊருக்கு போவதற்கு செலவுக்கு மட்டும் பணம் இருந்தால் போதும் என் தெரிவிதார். அதற்கு ரஜினிகாந்த் இல்லை மொத்த பணத்தையும் எடுத்துக்கொள் என்றார். எனக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாயை அன்றைய காலகட்டத்தில் கொடுத்துள்ளார்.
மேலும் நீ எங்கிருந்தாலும் நன்றாக இரு என ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார் ரஜினிகாந்த். பின் ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் வீடு கட்டி செட்டிலாகி இருக்கிறார். இடையில் குடிப்பழக்கதிற்கு எல்லாம் அடிமையாகி தற்போது வயது மூப்பு காரணமாக இப்போது தனிமையில் அனந்தபுரம் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறாராம்.