Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீர்னு தலை சுற்றல் பிரச்சனை ஏற்படுதா? அப்போ 10 கிராம் சீரகத்தை எடுத்து இப்படி பயன்படுத்துங்க!!

தற்பொழுது நாம் வாழும் வாழ்க்கை முறை முற்றிலும் ஆரோக்கியம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது.யாருக்கு எந்த நோய் பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாத வாழ்க்கையை தான் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வயதான பிறகு தான் சர்க்கரை,உயர் இரத்த அழுத்தம்,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்ற எண்ணம் தற்பொழுது முற்றிலும் பொய்யாகிவிட்டது.இன்று பள்ளி செல்லும் குழந்தைக்கு கூட நீரிழிவு நோய்,சிறுநீரக நோய் பாதிப்பு இருக்கிறது.

இதில் சர்க்கரை,உயர் இரத்த அழுத்த நோய் பாதிப்பு இருந்தால் அடிக்கடி தலைசுற்றல்,மயக்கம்,வாந்தி போன்ற பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தலோ அல்லது குறைந்தாலோ இந்த பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.

உடலில் இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள சீரகத்தை மருந்தாக பயன்படுத்தலாம்.சீரகத்தில் துத்தநாகம்,வைட்டமின் சி,பொட்டாசியம்,தாமிரம்,வைட்டமின் ஏ,ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த சீரகத்தை வைத்து தலை சுற்றலுக்கு அற்புத பானம் தயாரிப்பது குறித்து கீழே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.சீரகம் வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது.

2.அடுத்து இந்த சீரகத்தில் ஒன்றரை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

3.சீரகமும் தண்ணீரும் ஒன்றாக மிக்ஸ் ஆகி நிறம் மாறி வரும் அளவிற்கு கொதிக்க விட வேண்டும்.இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

4.அதன் பிறகு இந்த பானத்தை ஆறவைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்க வேண்டும்.இப்படி தினமும் காலை நேரத்தில் டீ,காபிக்கு பதில் பருகி வந்தால் திடீர் தலைசுற்றல் பிரச்சனையில் இருந்து முழுமையாக மீண்டுவிடலாம்.

Exit mobile version