Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!

#image_title

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினர் தீயை அனைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற மண்டபம் தீயணைப்பு துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்திலிருந்து ஏற்பட்ட தீப்பொறி கீழுள்ள சருகுகள் மீது பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

மிகவும் பிரசித்தி பெற்ற பாம்பன் பாலத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version