வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, சென்னையில் கடந்த மாதம் பெய்த மழை 2016ஆம் ஆண்டு பெய்த கனமழையை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது. இதனை அடுத்து சென்னையில் மழை விடாமல் கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகி தவிர்த்து வந்தார்கள்.
இந்த சூழ்நிலையில் சென்னையில் நேற்று இரவு மயிலாப்பூர், கிண்டி, வடபழனி, போரூர், உள்ளிட்ட பகுதிகளில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்தது. அதோடு சென்னையில் எழும்பூர், கொளத்தூர், வேளச்சேரி, என்று நகரின் முக்கிய பகுதிகளும் தாம்பரம், பல்லாவரம், உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், மழை பெய்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து கொண்டது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியது. தொடர்ந்து தொடர்வண்டி மற்றும் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சென்னைக்கு வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்து இருந்தது. ஆனால் தலைநகர் சென்னையில் நேற்று மாலை திடீரென்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ராமாபுரம், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, மெரினா, போரூர், ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகப்பெரிய சிரமத்திற்கு தள்ளப்பட்டார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் தஞ்சம் அடைந்தார்கள்.
அதேபோல சென்னை புறநகர் பகுதியான ஆலந்தூர், பரங்கிமலை, மீனம்பாக்கம், மடிப்பாக்கம், தரணி, கந்தன்சாவடி, உட்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. அதோடு நேற்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மழையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது. பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து நின்று கொண்டது.