சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரில் இருக்கின்ற பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய தண்டனை காலமானது வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய இருக்கின்ற நிலையில், அவர் இந்த மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆக இருக்கிறார் .இந்த சூழலில் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு சிறைக்கு போய் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இன்று பிற்பகலில் சசிகலாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவ குழு சசிகலாவின் அறைக்கு சென்றது. இப்பொழுது சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரே சசிகலா நீரிழிவு நோய் காரணமாக, ரத்த அழுத்தம் காரணமாகவும் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்னும் ஏழு தினங்களில் விடுதலையாக இருக்கும் சசிகலாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்திலும் அவருடைய ஆதரவாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.