நடுவானில் சென்றபோது ஏற்பட்ட திடீர் கோளாறு! உடனே விமானிகள் செய்த செயல்!
சென்னையிலிருந்து அந்தமான் போர்ட் பிளேயர் நோக்கி இன்று காலை 8.40 மணி அளவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 117 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 123 பேர் அந்தமான் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று விமானத்தில் ஏதோ தொழில் நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்துவிட்டார்.
அதன்காரணமாக துரிதமாக செயல்பட்ட விமானி தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அதன் பிறகு விமானத்தை மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பினார். அவரின் இந்த செயலினால் விமானம் பத்திரமாக தரையிறக்கப் பட்டது. இதன் காரணமாக அங்கு நடைபெற இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இதனை தொடர்ந்து மாற்று விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து அதன் மூலம் பயணிகள் அனைவரும் அந்தமான் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
அந்த விமானி சரியான நேரத்தில் அதை பார்த்திருக்காவிட்டால், பிரச்சனை வேறு விதமாக உருமாறிய பேராபத்து ஏதும் நிகழ்ந்திருக்கும். ஆனால் விமானி சமயோசிதமாக செயல் பட்டதன் காரணமாக பல உயிர்களை காப்பாற்றி உள்ளார். எனவே அனைவரும் மகிழ்ந்தனர்.