தேவதானபட்டி  காவல் ஆய்வாளர்  ஆட்டோ ஓட்டுனர்களிடம்  திடீர் சந்திப்பு!!

0
161
 தேவதானபட்டி  காவல் ஆய்வாளர்  ஆட்டோ ஓட்டுனர்களிடம்  திடீர் சந்திப்பு!!
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி  காவல் நிலையம் சார்பாக  காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் தேவதானபட்டி  தெற்குதெரு ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்து  ஆட்டோ ஓட்டும் விதிமுறைகளை சிறப்பாக எடுத்துரைத்தார்.
அவர் கூறுகையில்  ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிருத்தம் இடத்தில் மட்டும் தான் நிருத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள்  கைலி ,ட்ராக் பேண்ட் அணிந்து ஓட்ட கூடாது . முறையாக காக்கி உடை அணிந்து அதற்குரிய ஐடி பேட்ஜ் கண்டிப்பாக அணிய வேண்டும் முக்கியமாக முடி, தாடி சரியான முறையில் திருத்தம் செய்ய வேண்டும் .ஆட்டோவில் 3 நபர் மட்டுமே ஏற்ற வேண்டும்.
கூட்டம் கூட்டமாக ஏற்ற கூடாது ஆட்டோ ஸ்டான்டில் யாரும் மது அருந்துவதோ  இல்லை மது அருந்தி விட்டு வாகணம் ஓட்டவோ கூடாது எனவும். ஆட்டோக்கலில் பொதுமக்களை ஏற்றி செல்லும் போது மிகவும் பாதுகாப்பான முறையில் சரியான கட்டணம் பெற்று ஏற்றி இரக்கவும்   முற்றிலும் பெண்களிடம் கணிவாக நடந்து கொள்ள வேண்டும்.
ஆட்டோக்களில் ஏறிவரும் நபர்கள் மது மற்றும் போதை பொருள் கஞ்சா போன்றவை எடுத்து சென்றால் உடனடியாக  காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.இரவில் ஆட்டோ ஒட்டும் ஒட்டுனர்கள் பகலில் நன்றாக தூங்கி எழுந்து பின்பு இரவில் நல்ல முறையில் ஆட்டோ ஒட்டவும் ,இரவில் ஒட்டும் நபர்கள் கையெழுத்து  செய்த பின்பு தான் ஆட்டோ ஒட்டி செல்ல வேண்டும் எனவும் ஆட்டோ  ஓட்டுனர்களிடம் அன்போடு கேட்டுக் கொண்டார்.
பின்பு ஆட்டோ ஓட்டுனர்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.அதை உடனடியாக சரி செய்து தருகிறேன் என்று வாக்குருதி அளித்தார். இந்த கலைந்தாய்வில் தேவதானபட்டி சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி கலந்து கொண்டார்.இக்கூட்ட முடிவில் ஆய்வாளர் சங்கர் எடுத்துரைத்தது. ஆட்டோ ஓட்டுனர்களிடம் பெரும வரவேர்ப்பை ஏற்படுத்தியது..