தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரும் திடீர் மின்வெட்டு!!

0
96
#image_title

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரும் திடீர் மின்வெட்டு

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் திடீர், திடீர் என மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து மின்சாரத் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. மற்றொருபுறம் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் விநியோகம் சீராக இல்லை என்றும் விவசாயிகள் அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டுகின்றனர் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் வேளாண் பணிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றன.

குறிப்பாக இரவு எட்டு மணிக்கு மேல் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதால் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக நள்ளிரவில் ஏற்படும் மின்தடையால் மக்கள் அனைவரும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இதை சீர்செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளனர். பலர் மின்னஞ்சல் மூலமாகவும் நேரடியாக மின்சாரத்துறை அலுவலகத்திற்கு சென்று முறையிட்டு வருகின்றனர். இருப்பினும் மின்சாரத் துறை தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போதுமான அளவு இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே தமிழக அரசு மின்சாரத் துரையை சீர்படுத்தி பற்றாக்குறையாக உள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்தும் இல்லை என்றால் மின்சாரத்தை அண்டை மாநிலங்களில் வாங்கியும் சீர்செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.