இலவச மின் இணைப்புகளுக்கு வந்த திடீர் சிக்கல்!! தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

0
191
Sudden problem with free electricity connections!! Tamil Nadu government's action order!!

 

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு முறைக்கு மேலாக மின்சார கட்டணத்தை உயர்த்திவிட்டது. இது குறித்து மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மற்ற மாநிலங்களை காட்டிலும் குறைவான கட்டணமாக தான் தமிழகத்தில் இருப்பதாக விளக்கம் அளித்தனர். அதுமட்டுமின்றி கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட பகிர்மான கழகத்தின் நிதி இழப்பு தற்பொழுது வரை ஈடுகட்ட முடியாமல் உள்ளது என்றும் கூறினர்.

அந்த வகையில் திருட்டு மின்சாரம் உபயோகிப்பவர் குறித்து புகார் அளிக்கும் வகையில் புதிய செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தினர். தற்பொழுது மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் இலவச மின்சாரம் வழங்குவது குறித்து கணக்கீடு நடத்தும் படி தெரிவித்துள்ளது. அதாவது 100 யூனிட் இலவசம் மின்சாரமானது 60 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தவறுதலாக உபயோகப்படுத்தும் நபர்களை கண்டறிய இந்த ஆய்வு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதன் மூலம் கண்டறியப்படும் திருட்டு இணைப்புகள் துண்டிப்பதுடன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர். மாவட்டம் தோறும் இந்த ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி சமீப காலமாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்று வாங்கிவிட்டு அதனை உபயோகிக்காமல் தங்களின் சொந்த காரணங்களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமாகத்தான் உள்ளது. இவையனைத்தும் இந்த ஆய்வு நடத்துவதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.