Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்??

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்??

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இன்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கான தீர்ப்புகளுக்காக எதிர்பார்திருக்கும் நிலையில் பரபரப்புடன் கட்சி அமைச்சர்கள் இருக்கும் சமயத்தில், திடீரென முன்னாள் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 41 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் வந்த நிலையில் வழக்குப்பதிவு செய்து ஆய்வில் ஈடுபட்டார். காமராஜ் அவரது மகன்கள் இனியன், அன்பன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபாலசமுத்திரம் வடக்கு வீதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சார் காமராஜ் வீட்டில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர்.இச்சோதனை அதிகாலை 5 மணி அளவில் இருந்து நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னையில் காமராஜ் தொடர்புடைய 6 இடங்களிலும், காமராஜின் நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 49 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இதனிடையே, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவது எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவது பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

Exit mobile version