திருச்செங்கோடு அரசு அலுவலகத்தில் திடீர் ரெய்டு!! லட்சக்கணக்கில் சிக்கிய பணம்!! 

0
74
Sudden raid on Thiruchengode government office!! Lakhs of trapped money!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.

அலுவலகத்தில் 30 பேரிடம் விசாரணை செய்த நிலையில், அங்கு எல்காட் போட்டோகிராபராகப் பணிபுரியும் பஷீர் அகமத் என்பவரிடம் ரூ. 71,150 , அலுவலகத்திற்குள் இருந்த சில புரோக்கர்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமானவர்களிடமிருந்து ரூ. 61,900 இதர ரொக்கம் உட்பட மொத்தமாக ரூ.1,42,500 பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

பணம் வைத்திருந்த பஷீர் அகமத் உள்ளிட்ட சில பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை சம்பந்தமாக யாரையும் கைது செய்யவில்லை என்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். என்ன தான் அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், மக்களாகிய நாம் இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் தங்கள் பணியைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.