Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலைநகர் சென்னையில் அதிகாலை நேரத்தில் திடீரென்று பெய்த மழை!

சென்னையில் இன்று அதிகாலை முதல் திடீரென்று மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 16 மற்றும் 17 தேதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை திடீரென்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்து இருக்கிறது. சென்னை, புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, ஜாபர்கான்பேட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version