நாமக்கல் மாவட்டத்தில் திடீரென்று சுவர் இடிந்து விழுந்து விபத்து! வீட்டிற்குள் சிக்கி தவித்த குடும்பம்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஒன்பதாம் படி பகுதியை சேர்ந்தவர் சேகர். எனது குடும்பத்துடன் அப்பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு திடீரென ஒரு வீட்டின் முன்பக்கம் சுவர் இடிந்து விழுந்து தரைமட்டமானது இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாத சூழ்நிலையில் தவித்தனர்.
மேலும் இது குறித்து குமாரபாளையம் வட்டாரத்து தமிழரசு மற்றும் வருவாய்த்துறை என சுவர் இடிந்து விழுந்த வீட்டிற்குள் சிக்கித் தவித்த சேகர் மற்றும் அவரது தாய்,தந்தை,மனைவியை வீட்டிலிருந்து வெளியேற கூறினார்கள் பயம் காரணமாக வற்புறுத்தியும் அவர்கள் வெளியே வர மறுக்கவும் அவர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறை உடைந்து விழுந்து வீட்டிற்குள் சித்தி தவித்த மூன்று பேரையும் மீட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தில் இருந்த அனைவரும் உயிர்த்தப்பினர் சாக்கடை கால்வாய் மண் அரிப்பினால் வீடு இடிந்து விழுந்தது எனவும் போலீசார் விசாரணை தெரியவந்தது இதனை எடுத்து சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டாட்சிய தமிழரசி நெடுஞ்சாலை துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். திடீரென்று இரவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது