Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன? 

#image_title

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன? 

திடீரென ஏடிஎம் கிளை ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. இதில் உள்ளிருந்த பணத்தின் கதி என்னவென்று தெரியவில்லை.

ஏடிஎம் மையத்தில் உள்ள ஏசியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் தீப்பிடித்து ஏடிஎம் எந்திரம் முழுவதும் எரிந்து நாசமானது. அதில் உள்ள பணம் தப்பியதா?  என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுப்பற்றி கூறப்படுவதாவது,

சென்னையில் அருகே உள்ள நெற்குன்றம் பகுதியில் உள்ள பட்டேல் ரோடு பகுதியில் வசித்து வருபவர் காஜா மொய்தீன் வயது 45. இவருக்கு அங்கே இரண்டு தளங்களுடன் கூடிய கட்டிடம் சொந்தமாக உள்ளது. அதில் வீட்டின் முதல் தளத்தில் காஜா மொய்தீன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ்த்தளத்தில் இரண்டு கடைகள் உள்ளன. அவற்றை காஜா மொய்தீன் வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒன்று தையல்  நிலையமும், தனியார் வங்கியின் ஏடிஎம் கிளை ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏடிஎம் மையத்தில் தீப்பிடித்துள்ளது. இதனை கண்டு அதிர்ந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக முயற்சி செய்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்காமல் தீயானது ஏடிஎம் மையம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

ஏடிஎம் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததை தொடர்ந்து அருகில் உள்ள தையல் கடை மற்றும் வீட்டின் மேல் தளத்தின் மீதும் தீயானது பரவத் தொடங்கியது. தீயின் வெப்பம் தாங்காமல் ராஜா மொய்தீன் குடும்பத்தினர் கூச்சலிட்டுக் கொண்டே வெளியே ஓடி வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே கோயம்பேடு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் ஏடிஎம் எந்திரம் முழுவதும் எரிந்து நாசமானது. அருகில் இருந்த தையல் நிலையம் மற்றும் மேல் தளத்தில் லேசான பாதிப்பு ஏற்பட்டது.

தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ஏடிஎம் மையத்தில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் ஏடிஎம் எந்திரம் முழுவதும் எரிந்து நாசமானது.

ஆனாலும் ஏடிஎம் எந்திரத்தில் பணம் இருக்கும் பெட்டியில் தீப்பிடித்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதப்படுகிறது.  எனவே ஏடிஎம் எந்திரத்தில் இருந்த 20 லட்சம் பணம் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை மும்பையில் இருக்கும் அந்த வங்கியின் ஊழியர்கள் வந்து பெட்டியை திறந்து பார்த்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும். என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version