Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீராத அல்சர் பிரச்சனையால் அவதிப்படுகிறீகளா? கவலையை விட்டு தள்ளுங்க! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

#image_title

தீராத அல்சர் பிரச்சனையால் அவதிப்படுகிறீகளா? கவலையை விட்டு தள்ளுங்க! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

நவீன காலத்தில் நம் வாழ்க்கை மற்றும் உணவு முறை எல்லாம் காலத்திற்கேற்ப மாறிவிட்டது.இதனால் நிற்க நேரமின்றி அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நாள்தோறும் பணத்திற்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்.இதனால் சரியான உணவு முறையை கடைபிடிக்காமல் நாம் உடல் ஆரோக்கியத்தை கண்டு கொள்ளாமல் நாம் மிகப் பெரிய தவறை செய்து வருகிறோம்.

இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர்,வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது.வெகுநேரம் உணவு உட்கொள்ள வில்லை என்றால் குடற்புண் ஏற்பட்டு நாளடைவில் அல்சராக மாறிவிடுகின்றது.அடிவயிற்று வலி,குமட்டல்,வயிறு உப்பசம்,கருப்பு நிற மலம்,திடீர் எடை குறைவு,புளித்த ஏப்பம் போன்றவை அல்சர் இருப்பதற்கான பொதுவான காரணங்களாக சொல்ல படுகின்றது.இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*மொந்தன் வாழை – 1/2 துண்டு

*ஏலக்காய் – 6 முதல் 7

*கருப்பு மிளகு – 10

*நாட்டு சர்க்கரை – 1 தேக்கரண்டி

செய்முறை:-

உரலில் ஏலக்காய் 6 முதல் 7 வரை சேர்த்து கொள்ளவும்.பின்னர் மிளகு 10 சேர்த்து இடித்து கொள்ளவும்.பின்னர் ஏலக்காய் தோலை மட்டும் நீக்கி விட்டு இடித்த பொருளை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளவும்.

பிறகு ஒரு பவுலில் வாழைப்பழத்தை சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்.இதை இடித்து வைத்துள்ள ஏலக்காய் + மிளகு தூளில் சேர்த்து நன்கு கலக்கவும்.அதன் பின்னர் நாட்டு சர்க்கரை 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி இதனை உண்ணவும்.தொடர்ந்து இதை உண்டு வந்தோம் என்றால் குடற்புண் நீங்கி அல்சர் பாதிப்பு சரியாகி விடும்.

Exit mobile version