வயிற்று வலியால் துடிக்கிறீர்களா? அப்போ இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க.. 2 நிமிடத்தில் வலி பறந்துவிடும்!
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் ஒன்று வயிற்றுவலி.இவை வயிறுக் கோளாறு,செரிமான பிரச்சனை,வயிற்றுப்போக்கு,மலச்சிக்கல் போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது.
அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டால் அதை அலட்சியப் படுத்தாமல் குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள்.நீங்கள் வயிற்றுவலி சாதாரண பாதிப்பு தான் என்று கருதி அலட்சியப்படுத்தினால் அவை குடல் ஆரோக்கியத்தை பாதித்து கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
வயிற்றுவலி
சிலருக்கு உணவு சாப்பிட்ட பின்னர் வயிற்றுப்பகுதியில் குத்தல்,இழுத்து பிடித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.சிலர் எதுவும் உட்கொள்ளாமலே இந்த பாதிப்பை சந்திப்பர்.வயிறுவலி ஏற்படும் பொழுது நெஞ்சு எரிச்சல்,குமட்டல்,வயிறு வீக்கம்,புளித்த ஏப்பம்,வயிற்றுப்போக்கு,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
வயிற்றுவலிக்கு சிறந்த கை மருந்து:
1)இஞ்சி அல்லது இஞ்சி வற்றல் பொடி
2)தேன்
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு துண்டு இடித்த இஞ்சி அல்லது 1/2 தேக்கரண்டி இஞ்சி வற்றல் பொடி சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.
1)புதினா
2)தேன்
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 5 புதினா இலைகளை போட்டு கொதிக்க வைக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்தால் வயிற்றுவலி,வாயுத் தொல்லை அகலும்.
1)பெருங்காயம்
ஒரு கிளாஸ் வெந்நீரில் 1/4 தேக்கரண்டி பெருங்காயப் பொடி சேர்த்து குடித்தால் வயிற்றுவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
1)சோம்பு
2)தேன்
ஒரு கிளாஸ் அளவு நீரில் 1/4 தேக்கரண்டி சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் அகலும்