நீண்ட நாள் முதுகு வலி மூட்டு வலியை அனுபவித்து வருபவரா? ஒரு ஸ்பூன் ஜவ்வரிசி தான் இதற்கு மருந்து!!

0
330
Suffering from chronic back pain and joint pain? A spoonful of barley is the cure!!

நீண்ட நாள் முதுகு வலி மூட்டு வலியை அனுபவித்து வருபவரா? ஒரு ஸ்பூன் ஜவ்வரிசி தான் இதற்கு மருந்து!!

எளிதில் நோய் தொற்றுக்கள் அண்டக் கூடிய இக்காலத்தில் நம் உடல் ஆரோக்கியத்தை முறையாக பராமரிப்பது அவசியமான ஒன்றாக உள்ளது.

ஆனால் சிலர் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கங்களால் சிறு வயதிலேயே முதுகு வலி,மூட்டு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்கின்றனர்.இதை குணமாக்க ராகி,ஜவ்வரிசியை கீழ்கண்டவாறு பயன்படுத்தி வர வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி – 100 கிராம்
2)ஜவ்வரிசி – 100 கிராம்
3)பாதாம் பருப்பு

செய்முறை:-

ஒரு கப் ஜவ்வரிசி மற்றும் ஒரு கப் ராகியை வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.வாணலி சூட்டில் 10 பாதாம் பருப்பை போட்டு லேசாக வறுத்து நன்கு ஆறவிட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

இதில் ஒரு தேக்கரண்டி பவுடரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.பிறகு இதை அடுப்பில் வைத்து குறைவான தீயில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் நீண்ட நாள் முதுகு வலி,மூட்டு வலி அனைத்தும் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து – 50 கிராம்(உடைத்து)
2)ராகி – 50 கிராம்

செய்முறை:-

ஒரு வாணலியில் 50 கிராம் கருப்பு உளுந்து மற்றும் 50 கிராம் ராகி சேர்த்து அடுப்பில் வைத்து வாசனை வரும் அளவிற்கு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடர்க்கி ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க வைக்கவும்.பிறகு சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்து வர மூட்டு வலி,முதுகு வலி முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய்
2)வெல்லம்
3)ஏலக்காய்
4)முந்திரி
5)பாதாம்

செய்முறை:-

முதலில் ஒரு மூடி தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு சிறிய பாத்திரம் வைத்து 5 முந்திரி மற்றும் 5 பாதாம் சேர்த்து லேசாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் துருவிய தேங்காயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.பிறகு வறுத்த பாதாம் மற்றும் முந்திரி பருப்பு மற்றும் ஒரு ஏலக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரம் எடுத்து அரைத்து வடிகட்டி வைத்திருக்கும் தேங்காய் பால் மற்றும் அரைத்த முந்திரி,பாதாம் பவுடரை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.தேங்காய் பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்கவிடவும்.

அடுத்து தேவையான அளவு வெல்லத்தை அதில் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் மூட்டு வலி,முதுகு வலி பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.