அடுக்குத் தும்மல் பிரச்சனையால் அவதியா? இந்த ஒரு பூவில் டீ போட்டு குடித்தால் சரியாகிவிடும்!!

0
103
Suffering from chronic sneezing problem? If you put tea in this one flower and drink it, it will be fine!!

ஒவ்வாமை,சளி,அலர்ஜி போன்ற காரணங்களால் தும்மல் ஏற்படுகிறது.தும்மல் சில நொடிகளில் நின்றுவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.ஒருவேளை அடுக்குத் தும்மல் ஏற்பட்டால் அது அசௌகரியத்தை உண்டாக்கும்.

தொடர் தும்மல் பிரச்சனை சரியாக சிறந்த வீட்டு வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

1)சீமை சாமந்தி பூ
2)தேன்
3)தண்ணீர்

முதலில் ஒரு கைப்பிடி சீமை சாமந்தி பூவை வெயிலில் காயவைத்து அரைத்து பவுடர் செய்து கொள்ளவும்.

இல்லையென்றால் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கேமோமைல் பொடி தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீமை சாமந்தி பூ பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.பிறகு அதை ஒரு கிளாஸிற்கு வடித்து தேன் கலந்து குடித்தால் அடுக்கு தும்மல் சரியாகும்.

1)நெல்லிக்காய்
2)தேன்
3)தண்ணீர்

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் நெல்லிக்காய் பொடியை தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் தொடர் தும்மல் நிற்கும்.

1)கருப்பு ஏலக்காய்
2)தேன்

சிறிதளவு கருப்பு ஏலக்காய் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிதளவு தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டால் தொடர் தும்மல் நிற்கும்.

1)இஞ்சி
2)துளசி
3)தேன்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஒரு துண்டு இடித்த இஞ்சி,சிறிது துளசி இலை சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் தொடர் தும்மலுக்கு தீர்வு கிடைக்கும்.