கோவில்கள் மற்றும் வீடுகளில் தோரணம் கட்ட பயன்படும் மாவிலை ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை ஆகும்.மாவிலையை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது.
செரிமானப் பிரச்சனை,சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கு மாவிலை சிறந்த தீர்வாக விளங்குகிறது.
மாவிலை சத்துக்கள்:
*புரதம்
*தாதுக்கள்
*வைட்டமின் ஏ,பி,சி
மாவிலை டீ தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
1)மாவிலை
2)தேன்
3)இஞ்சி
4)தண்ணீர்
செய்முறை:
முதலில் 10 மாவிலையை எடுத்து நீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை நிழலில் கொட்டி மொரு மொரு பதத்திற்கு காய வைத்துக் கொள்ளவும்.அதன் பிறகு மிக்ஸி ஜாரில் இந்த மாவிலையை போட்டு அரைத்து பவுடர் செய்து கொள்ளவும்.
மாவிலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் மாவிலை பொடி 100 கிராமிற்கு வாங்கிக் கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
இந்த இரு பொருளையும் வைத்து டீ தயாரிக்க வேண்டும்.அதற்கு முதலில் ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து பற்ற வைக்க வேண்டும்.
தண்ணீர் சூடானதும் மாவிலை பொடி ஒரு தேக்கரண்டி சேர்க்க வேண்டும்.பிறகு நறுக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேவையான அளவு தேன் கலந்து குடிக்க வேண்டும்.
தேயிலை டீ மற்றும் காபிக்கு பதில் இந்த மாவிலை பானத்தை குடித்து வந்தால் வாயுத் தொல்லை,அஜீரணக் கோளாறு,இரத்த அழுத்தம்,வயிற்றுப்புண்,சிறுநீரக தொற்று உள்ளிட்ட வியாதிகள் குணமாகும்.
இந்த பானம் தயாரிக்கும் போது எலுமிச்சை இலை இரண்டு சேர்த்து கொண்டால் உடல் சோர்வு,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும்.