Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!!

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!!

பல பேருக்கு இருக்கின்ற ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை தான் மூல வியாதி. அதாவது ஆசனவாயில் முற்பகுதியிலோ அல்லது வெளியிலோ சதை வளர்ந்து ஆசனவாயை அடைக்க கூடியது தான் மூல வியாதி என்று கூறுவார்கள். இதில் உள் மூலம், வெளி மூலம், ரத்த மூலம், பௌத்திரம் மூலம் என்று பல வகைகள் உள்ளது.

இந்த மூல வியாதியால் உண்டாக்கக்கூடிய அவஸ்தையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதனால் மலம் கழிக்கும் போது அதில் ரத்தமும் சேர்ந்து வந்து மிகவும் சிரமத்திற்கு உள்ளார்கள்.

இந்த மூல வியாதியை வீட்டிலேயே எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம். இந்த மூல வியாதியை நிரந்தரமாக குணப்படுத்த நாம் பயன்படுத்தக்கூடிய மூலிகை துத்தி இலை. மூல வியாதியை நிரந்தரமாக குணப்படுத்தக்கூடிய ஆற்றல் இந்த துத்தி இலைக்கு உள்ளது.

இந்த துத்தி இலை சாதாரணமாக சாலையின் ஓரங்களில் கிடைக்கும். இதனுடைய இலையானது இருதய வடிவத்தில் மற்றும் இதன் பூவானது மஞ்சள் நிறத்திலும் இதன் காயானது பச்சை நிறத்திலும் காணப்படும்.இதன் இலைகளை பொறியியலாக சமைத்து சாப்பிட்டு வரலாம் உடம்பிற்கு மிகவும் நல்லது.

செய்முறை:
எட்டிலிருந்து பத்து துத்தி இலைகளை பறித்து நன்றாக கழுவி விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளவும். இவ்வாறு அரைத்த விழுதிலிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனை நீர் மோருடன் கலந்து கொள்ளவும்.

இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து காலை வெறும் வயிற்றிலோ அல்லது ஒரு 11 மணி அளவிலோ குடித்து வரலாம். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் மூல வியாதியால் ஏற்படக்கூடிய வேதனை சிறிது சிறிதாக குறையும். அதேசமயம் இந்த மூல வியாதி நிரந்தரமாக குணமாகும்.

அடுத்து இந்த அரைத்த துத்தி இலை விழுதுடன் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து இரவு தூங்குவதற்கு முன்பு ஆசனவாயில் இதை வைத்து ஒரு துணியை கொண்டு கட்டிக் கொள்ளவும். இவ்வாறு செய்வதால் ஆசனவாயில் இருக்கக்கூடிய புண்கள் விரைவாக சரியாகும்.

மூல வியாதிக்கு முக்கிய காரணமாக இருக்கும் மலச்சிக்கல் உடல் சூடு மற்றும் ஆசனவாய் சூடு போன்றவற்றை முற்றிலுமாக சரி செய்யக்கூடிய சக்தி இந்த துத்தி இலைக்கு உள்ளது. ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்கள் இந்த மூல வியாதியால் மிகவும் சிரமப்படுவார்கள் அவர்கள் இந்த ரெமிடியை மூன்று நாட்களுக்கு செய்துவர மூல வியாதியை குணமாக்கலாம்.

Exit mobile version