மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ 1 கிளாஸ் பாலுடன் இதை சேர்த்து பருகி பாருங்கள் ஒரே வாரத்தில் முழு தீர்வு கிடைக்கும்!!

0
88
#image_title

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ 1 கிளாஸ் பாலுடன் இதை சேர்த்து பருகி பாருங்கள் ஒரே வாரத்தில் முழு தீர்வு கிடைக்கும்!!

இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பாதிப்பு மூட்டு வலி. இந்த பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்ட ஆரமித்து விட்டால் சுலபமான வேலைகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும். பிறர் உதவியை நாடும் நிலை ஏற்பட்டு விடும்.

மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:-

*ஆரோக்கியமற்ற உணவு

*ஜவ்வு தேய்மானம் ஆகுதல்

*எலும்பு தேய்மானம் ஆகுதல்

*வயது மூப்பு

*வேலை பளு

*உடல் பருமன்

மூட்டு வலி பிரச்சனைக்கு எளிய தீர்வு:-

தேவையான பொருட்கள்;-

*பால் – 1 டம்ளர்

*மிளகு – 5

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*பூண்டு – 3 பல்

செய்முறை:-

முதலில் 5 கருப்பு மிளகு எடுத்து ஒரு உரலில் சேர்த்து இடித்து கொள்ளவும். பின்னர் 3 பூண்டு பற்களை எடுத்து அதன் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் பால் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து கிளறி விடவும்.

இதை தொடர்ந்து 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும். இவை கொதிக்கும் நேரத்தில் இடித்த மிளகு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இந்த பாலை ஒரு டம்ளரில் ஊற்றி பருகவும். இவ்வாறு தொடர்ந்து இந்த பாலை பருகி வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலி விரைவில் குணமாகும்.

குறிப்பு:-

சுவைக்காக தேன், சர்க்கரை போன்ற எந்த பொருளையும் சேர்க்க கூடாது. காலையில் வெறும் வயிற்றில் பருகினால் நல்லது.