வாயில் ஏற்படும் புண்களால் அவதிப்படுகின்றீர்களா? வாய்ப்புண் பல்லி எச்சம் குணமாக இதோ எளிய வழி! 

0
621
#image_title

வாயில் ஏற்படும் புண்களால் அவதிப்படுகின்றீர்களா? வாய்ப்புண் பல்லி எச்சம் குணமாக இதோ எளிய வழி! 

ஒரு சிலர் தூங்கி எழுந்தவுடன் வாயின் ஓரத்தில் அல்லது உதட்டின் மேல்  மற்றும் கீழ் புண்கள் காணப்படும். இதனை வாய்ப்புண், உதட்டுப்புண், பல்லி எச்சம் என பலவாறு கூறுவார்கள்.இதை பல்லி எச்சம் பட்டதால் வருகின்ற புண் என்று நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை இல்லை இது ஹெர்பீஸ் சிம்ப்ளெக்ஸ் என்னும் ஒரு வகை வைரசால் ஏற்படுகிறது. இது HSV என அழைக்கப்படுகிறது.

இது சிக்கன் பாக்ஸ் வகையைச் சார்ந்த வைரஸ். இதில் இரண்டு வகைகள் உள்ளன. இதில் டைப் 1 வகை சார்ந்த வைரசால்தான் இந்த வாய்ப்புண் ஏற்படுகிறது. இது வருவதற்கான காரணம் மற்றும் சரி செய்யும் வழிமுறைகளை காண்போம்.

காரணங்கள்:

1. குறைவான நோய் எதிர்ப்பு சக்தி.

2. காய்ச்சல்

3. சூரிய ஒளி

4. மன அழுத்தம்

5. மாதவிடாய் காலம்

6. HSV பாதிப்பு உள்ளவர்கள் முத்தமிடுவது, மற்றும் இவர்கள் பயன்படுத்திய துண்டு ஆடைகள் முதலியவற்றை பயன்படுத்தும் பொழுது பரவும் வாய்ப்புகள் உண்டு.

சரி செய்யும் முறை:

இந்த வாய்ப்புண் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் சில பேருக்கு எரிச்சல், வலி, காந்தல் உணர்வு போன்றவை உண்டாகக்கூடும்.

1. ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் கட்டிகளை எடுத்து புண்கள் வந்து இடத்தில் ஒத்தடம் கொடுக்க காந்தல் உணர்வு குறைந்து புண் சரியாகும்.

2. ஆன்ட்டி செப்டிக் சோப் கொண்டு புண்வந்த இடத்தில் கழுவி விட்டு சுத்தமான தேங்காய் எண்ணெயை தடவலாம்.

3. பெட்ரோலியம் ஜெல்லி எனப்படும் வாசலினை தடவலாம். இது மேலும் புண்கள் பரவாமல் தடுக்கும்.

4. Tea Tree oil எனப்படும் essential ஆயிலை தடவினால் இந்த வாய்ப்புண் சரியாகும் என நிறைய மருத்துவ நூல்கள் கூறுகின்றன.