Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீராத மலசிக்கல் பாதிப்பா? விளக்கெண்ணெயில் தீர்வு இருக்கு!! உடனே ட்ரை பண்ணுங்க!!

#image_title

தீராத மலசிக்கல் பாதிப்பா? விளக்கெண்ணெயில் தீர்வு இருக்கு!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தினமும் காலை கடனை முடிப்பது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றவும். ஒருவேளை அவற்றை கழிக்காமல் அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் மலம் கழிக்கும் பொழுது மிகுந்த வலி மற்றும் எரிச்சல் ஏற்படத் தொடங்கும்.

மலசிக்கல் உருவக காரணம்:-

*எளிதில் செரிமானம் ஆகாத உணவு

*முறையற்ற தூக்கம்

*தேவையான நீர் பருகாமல் இருத்தல்

*மலத்தை அடக்கி வைத்தல்

*அளவுக்கு மீறி உணவு உட்கொள்ளுதல்

*நார்ச்சத்து மற்றும் நீர்சத்து குறைபாடு

*வயது முதுமை

*மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு

மலச்சிக்கல் பாதிப்பு நீங்க எளிய வழிகள் இதோ:-

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

விளக்கு எண்ணெய்

கல் உப்பு

எலுமிச்சை சாறு

செய்முறை:-

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி 1 தேக்கரண்டி விளக்கெண்ணய் ஊற்றி கொள்ளவும்.

அதன் பிறகு 1 சிட்டிகை அளவு சாதாரண உப்பு அல்லது இந்துப்பு சேர்த்து கலக்கவும். அதனோடு எலுமிச்சை சாறு 10 சொட்டுகள் விட்டு அவற்றை குடிக்கவும். இவ்வாறு செய்தால் அடுத்த 10 நிமிடங்களில் மலசிக்கல் பாதிப்பு முழுமையாக நீங்கிவிடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

விளக்கு எண்ணெய்

வெந்தயம்

வெள்ளை சர்க்கரை

செய்முறை:-

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் அதனை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு பவுலில் அரைத்து வைத்துள்ள வெந்தயப் பொடி,1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். இதையடுத்து 1 தேக்கரண்டி விளக்கு எண்ணெய் சேர்த்து நன்கு குழைத்து கொள்ளவும்.பிறகு அதனை சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் அடுத்த நிமிடத்தில் உடலில் தேங்கி கடந்த மலம் உடனடியாக வெளியேற தொடங்கும்.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

விளக்கு எண்ணெய்

எலுமிச்சை சாறு

செய்முறை:-

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி 1 தேக்கரண்டி விளக்கெண்ணய் ஊற்றி கொள்ளவும்.

அதன் பிறகு எலுமிச்சை சாறு 1/4 தேக்கரண்டி விட்டு அவற்றை பருகவும். இவ்வாறு செய்தால் அடுத்த 30 நிமிடங்களில் மலசிக்கல் பாதிப்பு முழுமையாக நீங்கிவிடும்.

Exit mobile version