தினமும் அதீத தலைவலியால் அவதியா? 2 கிராம்பு இருந்தால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் குறைந்திடும்!!

0
213
Suffering from severe headaches every day? Having 2 cloves will reduce any headache!!

தினமும் அதீத தலைவலியால் அவதியா? 2 கிராம்பு இருந்தால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் குறைந்திடும்!!

தலைவலி,தலைபாரம்,சைனஸ் போன்ற பாதிப்புகளை பலரும் சந்தித்து வருகின்றனர்.இந்த தலைவலி ஏற்பட்டால் மருந்து மாத்திரை விடுத்து அதை இயற்கை வழிகள் மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

1.கிராம்பு(இலவங்கம்)
2.உப்பு
3.பால்

முதலில் இரண்டு கிராம்பை உரலில் சேர்க்கவும்.பிறகு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் 50 மில்லி பாலை காய்ச்சி இடித்த கிராம்புத் தூளை சேர்த்து பருகினால் தலைவலி குறைந்துவிடும்.

1.எலுமிச்சை சாறு
2.தேன்

ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து விடவும்.

பிறகு இரு தேக்கரண்டி தேனை ஊற்றி கலக்கி குடித்தால் தீராத தலைவலி விடும்.

1.பட்டை
2.வாட்டர்

ஒரு துண்டு பட்டையை உரலில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி குறைந்துவிடும்.

1.இஞ்சி
2.மல்லி விதை
3.கருப்பட்டி

ஒரு கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு படுத்தவும்.பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி இடித்து அதில் போட்டுக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி மல்லி விதையை லேசாக வறுத்து இடித்து கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.இறுதியாக சிறிதளவு கருப்பட்டி சேர்த்து கொதிக்க விட்டு வடித்து அருந்தி வந்தால் தலைவலி குறையும்.

1.நெல்லிக்காய் சாறு
2.உப்பு

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஆவி வரும் வரை சூடாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து சூடான நீரில் சேர்க்கவும்.இதனுடன் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து ஆவி பிடித்தால் தலைவலி குறையும்.

1.சீரகம்
2.பட்டை

200 மில்லி நீரில் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு துண்டு பட்டை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி அருந்தி வந்தால் தலைவலிக்கு தீர்வு கிடைக்கும்.