Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அல்சரால் அவதியா? ஒரு கிளாஸ் மோரில் இந்த பொருளை சேர்த்துக் கொண்டால் ஒரே வாரத்தில் குடல் புண்கள் ஆறிவிடும்!!

இக்காலத்தில் அல்சர் என்பது சாதாரண பாதிப்பாக மாறிவிட்டது.உணவுமுறை பழக்கம்,உணவு தவிர்ப்பது போன்ற காரணங்களால் வயிற்றில் அல்சர் உருவாகிறது.இந்த அல்சர் புண்களுக்கு சரியான நேரத்தில் வைத்தியம் செய்யாவிட்டால் நிச்சயம் கடுமையான தொந்தரவுகளை நாம் சந்திக்க நேரிடும்.

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1.அதிகப்படியான புளிப்பு மற்றும் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

2.உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3.மது மற்றும் புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

4.பால்,புளித்த தயிர்,மாமிசம்,சர்க்கரை உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)மோர் – ஒரு கிளாஸ்
2)பெருங்காயத் தூள் – 1/4 தேக்கரண்டி
3)சீர்கத் தூள் – 1/4 தேக்கரண்டி
4)இந்துப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

**முதலில் அரை கப் தயிரை மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி மோர் பதம் வரும் வரை அரைக்க வேண்டும்.

**பிறகு இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு பீஸ் பெருங்காய கட்டியை நெருப்பில் சிறிது சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இதை ஆறவைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த பெருங்காயத் தூளை மோரில் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.அடுத்து சிறிது சீரகத்தை வாணலியில் போட்டு வறுத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த சீரகத் தூளை மோரில் போட்டு கலக்க வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு
இந்துப்பு சேர்த்து மிக்ஸ் செய்து பருகினால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகிவிடும்.

அல்சருக்கு மற்றொரு வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

1)பசு மோர் – ஒரு கிளாஸ்
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் வெந்தயப் பொடி தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு ஒரு வாணலி எடுத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்.

**பிறகு இதை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு கிளாஸ் மோரில் போட்டு மிக்ஸ் செய்து பருகினால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகிவிடும்.

**தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Exit mobile version