Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லையா? தினமும் ஒரு கப் கருவேப்பிலை டீ!!

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லையா? தினமும் ஒரு கப் கருவேப்பிலை டீ!!

நம் அனைவரது வீட்டிலும் பெரும்பாலும் கருவேப்பிலை உபயோகிப்போம். ஆனால் அதனை சரிவர நாம் உண்ணுவதில்லை. ஆனால் இந்த கருவேப்பிலையில் பல மருத்துவ குணங்கள் உள்ள நிலையில் நமது பாதைகளை விரைவில் குணமாக்க கூடியது.

எனவே நாம் கருவேப்பிலையை டீயாக வைத்து குடிப்பதன் மூலம் பல நன்மைகளை அடையலாம்

கருவேப்பிலை டீ

 

ஒரு கையளவு கருவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் எடுத்து வைத்துள்ள கருவேப்பிலையை போட்டு ஊற வைக்க வேண்டும்.

நன்றாக ஓர் ஏதும் அதனை வடிகட்டி அதில் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.

குறிப்பாக இதனை காலில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல நன்மைகள் உண்டாகும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த கருவேப்பிலை டீ பயன்படுகிறது.

அது மட்டும் இன்றி இதில் பலமிளக்கி பண்புகள் இருப்பதால் குடல் இயக்க சீராக்கப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையும் நிவர்த்தி ஆகும். அதுமட்டுமின்றி வாய்வு சம்பந்தமான பிரச்சனைகள் இந்த டீ குடிப்பதன் மூலம் குணமாகும்.

வாந்தி குமட்டல் மற்றும் சோர்வு உள்ளவர்கள் இந்த டீயை தாராளமாக பருகலாம். மாற்றத்தை நன்றாக காண முடியும்.

குறிப்பாக கருவேப்பிலை டீயை தினமும் குடித்து வருபவர்களுக்கு தொப்பை குறைவதுடன் முடி உதிர்வு பொடுகு தொல்லை இருப்பவர்களுக்கும் நல்ல மாற்றத்தை காண முடியும்.

 

Exit mobile version